November 26, 2011

மாவீரர் நாள் ௨௦௧௧(2011)

0 comments
களங்களில் ஆடிய பொழுதும் - பகை
அரண்களை அழித்த பொழுதும்
புகழுடன் மாய்ந்த மனிதர் - வெஞ்
சினத்துடன் வீழ்ந்த (மா)வீரர் - நம்
ஈழ மண்ணை அடைய - புலிகளாய்
எங்கும் பாய்ந்து; விழுப்புண் மார்பில் ஏந்தி;
விதைகளாய் விதைந்த தோழர் !

பகை பயத்துடன் புலத்தை நீங்கி - பின்
பிதற்றலாய் உரைகள் பேசி - இன்று
நலத்துடன் வாழும் தமிழர் எல்லாம்
தம் மார்பினை திமிர்த்தி - ஆங்கே
தலை நிமிர்ந்து நடக்குனரென்றால்;
அன்று செருக்கள் பலவும் கண்டு - செஞ்
சமரில் மடிந்த "உன்னால்" !

வீழ்ச்சி என்பது காலத்தின் இயல்பே - நாளைய
தமிழர் மாட்சி என்பதும் உண்மை !
மீண்டும் போரிட நேரும் - பகை
வன்மம் அழிக்க கோரும் சமயம்
துயில் கலைந்து எழுந்து வாரும் - அந்த
களங்களில் ஆட "நீவிர்" வேண்டும் !

Leave a Reply