December 4, 2011

நிறம் மாறும் மனசு

0 comments
சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் அதன் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால், அதில் எந்த தவறையும் நான் கண்டிருக்கமாட்டேன். எம் சுதந்திர கனவையும் தேசியத்தையும் தூற்றி பேசும் அந்த 'மா' மனிதர்களை சந்திக்கும் போதெல்லாம் எரிச்சலாகவும் 'இவனை ஒரு போடு போட்டால் என்ன' என்றும் தான் எண்ணத் தோன்றுகிறது.

# கற்பும் மானமும் களவாதி
ருக்க கடைசிவரை புலிகள் அரணாய் இருந்தவர்கள் என்ற நன்றி மறந்த மக்கள்.

சலித்துப் போன
கோபுரங்களை துறந்து
கோவணத்துடன் வந்தேன்;
கோமாளிகள் என்னை
புனிதன் என்றார்கள்
புத்தன் என்றார்கள்.

சற்று இளைப்பாற
அரச மரத்தடியில்
சும்மாய் அமர்ந்திருந்தேன்;
மடைச்சாம்பிரணிகள் என்னை
ஞானி என்றார்கள்
முனிவன் என்றார்கள்.

எவனும் கோவணம் உருவாதிருக்க
கால் மடக்கி, கை மறைக்க - ஆங்கே
களைப்பில் கண்ணயர்ந்தேன்;
பைத்தியக்காரர்கள் என்னை
துறவி என்றார்கள்
கடவுள் என்றார்கள்.

# புரிதலும் உணர்தலும் இல்லா தமிழ் சமுதாயம்......!?

Leave a Reply