December 31, 2011

மூதாய் போற்றி

0 comments
தமிழால் பித்தாகி, தமிழ் உணர்வாகி, அத் தமிழால் பகைமை அழிக்கும் புலியாகி, வெஞ் சினம் தணிந்து பிரிதொருநாள் நமக்கு தமிழே உணவாகி, பின் தமிழாகி வீழ்வது மூர்க்கம் என்றால்; முத்தமிழும் மூச்சில் அடக்கி, ஆங்கே தமிழாகவே வாழ்வது தீவிரவாதம் என்றால், அதை தீர்க்கமாக தொடர்ந்து செய்வோம் ! எம் தமிழே உலகத்துக்கெல்லாம் மூதாய்.

தமிழ் போற்றி வீழ்ந்தவனும் இல்லை...
தமிழ் தூற்றி வாழ்ந்தவனும் இல்லை...
பிறக்கின்ற புது ஆண்டும் மூதாய் போற்றட்டும் !

தித்திக்கும் தமிழாலே வாழ்த்துகுறேன்!!!
Continue reading →
December 30, 2011

சோளகர் தொட்டி

0 comments
"பிறப்புறுப்புக்களில் மின்சாரம் பாய்ச்சுவது, பாய்ச்சிய இடத்தில் மிளகாய்ப்பொடியைத் தேய்ப்பது, எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணை வன்புணர்ச்சி செய்வது, தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு அடிப்பது, வலிதாங்காமல் மலம் கழித்தால், அதை உண்ண வைப்பது என்று அந்தப் பழங்குடியின மக்கள் அடைந்த வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது....." இவ்வாறு அந்தப் பழங்குடியின மக்கள், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரின் கையில் சிக்கிச் சீரழிந்த கதையை, தோழர் பாலமுருகன் அவர்களின் "சோளகர் தொட்டி" நாவலைப் படித்து முடிக்கையில், மரண தண்டனையை தீவிரமாக எதிர்ப்பவர்கள் கூட, அந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தூக்கிலிட்டால் என்ன என்று எண்ண வைக்கும் அளவுக்கு கொடுமைகள் நடந்துள்ளன.

# வலி.
Continue reading →
December 21, 2011

இந்த "வெற்றிடங்கள்" தேவை

0 comments
கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை, தனிமை தேவை. வாழ்வியகத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவேதான் இந்த "வெற்றிடங்கள்" தேவை. இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும் ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம். இங்கே வாழ்க்கை ஒரு நூலகம் போன்றது - ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொரு விதமான அனுபவங்களையும், மன ஓட்டத்தையும் நமக்குள் ஏற்படுத்தும்.

# வாங்களேன் சேர்ந்து படிக்கலாம் !!!
Continue reading →
December 4, 2011

நிறம் மாறும் மனசு

0 comments
சனங்களே ஒத்துழைக்க மறுத்தபிறகு இந்தச் சனத்துக்கு போராடி என்ன போராடாட்டி என்ன என்று புலிகளும் அதன் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால், அதில் எந்த தவறையும் நான் கண்டிருக்கமாட்டேன். எம் சுதந்திர கனவையும் தேசியத்தையும் தூற்றி பேசும் அந்த 'மா' மனிதர்களை சந்திக்கும் போதெல்லாம் எரிச்சலாகவும் 'இவனை ஒரு போடு போட்டால் என்ன' என்றும் தான் எண்ணத் தோன்றுகிறது.

# கற்பும் மானமும் களவாதி
ருக்க கடைசிவரை புலிகள் அரணாய் இருந்தவர்கள் என்ற நன்றி மறந்த மக்கள்.

சலித்துப் போன
கோபுரங்களை துறந்து
கோவணத்துடன் வந்தேன்;
கோமாளிகள் என்னை
புனிதன் என்றார்கள்
புத்தன் என்றார்கள்.

சற்று இளைப்பாற
அரச மரத்தடியில்
சும்மாய் அமர்ந்திருந்தேன்;
மடைச்சாம்பிரணிகள் என்னை
ஞானி என்றார்கள்
முனிவன் என்றார்கள்.

எவனும் கோவணம் உருவாதிருக்க
கால் மடக்கி, கை மறைக்க - ஆங்கே
களைப்பில் கண்ணயர்ந்தேன்;
பைத்தியக்காரர்கள் என்னை
துறவி என்றார்கள்
கடவுள் என்றார்கள்.

# புரிதலும் உணர்தலும் இல்லா தமிழ் சமுதாயம்......!?
Continue reading →