கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை, தனிமை தேவை. வாழ்வியகத்தின்
இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான ஆழ்ந்த பரிமாற்றங்கள்
சாத்தியமில்லை. எனவேதான் இந்த "வெற்றிடங்கள்" தேவை. இவற்றில் நாம் கொஞ்சம்
ஆசுவாசமாக அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின்
சந்தோஷங்களையும், சோர்வுகளையும் ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின்
சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம். இங்கே வாழ்க்கை ஒரு நூலகம்
போன்றது - ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொரு விதமான அனுபவங்களையும், மன
ஓட்டத்தையும் நமக்குள் ஏற்படுத்தும்.
# வாங்களேன் சேர்ந்து படிக்கலாம் !!!
# வாங்களேன் சேர்ந்து படிக்கலாம் !!!