கடவுள் புராணம்
பிறந்தும் தவழ்ந்தும் நின்றும் நடந்தும்
கற்றும் கரந்தும் கடந்தும் கிடந்தும்
வளர்ந்தும் வளைந்தும் வதைத்தும் வணங்கியும்
உணர்ந்தும் உரைத்தும் உழைத்தும் உயர்ந்தும்
தளர்ந்தும் தவித்தும் தணிந்தும் துவன்றும்
அறிந்தும் அழித்தும் ஆக்கியும் ஆராதித்தும்
பறந்தும் பரந்தும் பயின்றும் பணித்தும்
இரைந்தும் இயற்றியும் ஈன்றும் ஈட்டியும்
ஒளிந்தும் ஒதுங்கியும் ஓதியும் ஓடியும்
மலர்ந்தும் மணந்தும் முதிர்ந்தும் மரித்தும்
கடைசியில் எல்லாம் கரைந்து போக
ஆத்மா மட்டும் மெய்யென்று உணர்ந்து
இறைவனை தொழுதவன் காலடி வீழ்ந்தேன்
சரணம்! சரணம்! மலரடி சரணம்!
சரணம்! சரணம்! அவனடி சரணம்!
சரணம்! சரணம்! சரணம்! சரணம்!
வேறு
சித்தம் எல்லாம் சிவஞானம் எனப்பெற்று
நித்தம் ஒருநாளும் உனைமறவா மனம்பெற்று
பந்தம் பணமாசை எல்லாமே அறுபட்டு
பித்தன் எனவாகி நின்பாதம் சரணடைய
உந்தன் கடைக்கண்ணால் என்னை நீ நோக்காயோ!